பப்புவா நியூ கினியாவில் பாரிய மண்சரிவு – 100 பேர் பலி!

Date:

பப்புவா நியூ கினியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டதாக அவுஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட துல்லியமான பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனினும் மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-க்கும் மேல் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக்கூடும் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மண்சரிவில் புதையுண்ட உடல்களை உள்ளூர்வாசிகள் மீட்டெடுக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...