பலஸ்தீன விவகாரத்தில் இலங்கையும் பாரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்: சபையில் மகிந்த

Date:

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்றஅமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றோம் பலஸ்தீன மக்கள் இன்று சொல்லொண்ணா துயரங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தியமைக்கு நான் இந்த உயரிய சபைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

பலஸ்தீன இலங்கை ஒத்துழைப்பு அமைப்பின் ஊடாக எம்மால் அந்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடிந்தது.

பலஸ்தீனில் அமைதியை நிலைநாட்டுவதற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட வேண்டும். இஸ்ரேலிய தாக்குதலினால் மில்லியன் கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர். கடந்தவாரத்தில் மாத்திரம் 50 லட்சம் பலஸ்தீன மக்கள் வெளியேறியுள்ளனர்.

பலஸ்தீன விவகாரம் தொடர்பாக உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் நாடு என்ற ரீதியில் இலங்கையும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அதேபோன்று பலஸ்தீன மக்களுக்கான நிவாரணங்களை தொடந்தும் வழங்க வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...