பலத்த பாதுகாப்புடன் ‘மிதிகம’ ருவன் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்

Date:

பாதாள உலக கும்பலின் தலைவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய கடத்தல்காரருமான விதானகே ருவன் சாமர என்றழைக்கப்படும் “மிதிகம ருவன்” துபாயிலிருந்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இவர் துபாயில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (31) காலை இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மிதிகம ருவன் பாதாள குழு உறுப்பினரான ஹரக் கட்டாவின் மைத்துனராவார்.

துபாய் களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மிதிகம ருவன் அந்நாட்டு பொலிஸாரினால் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார். சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பட்டியலில் அவரது பெயர் இருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். துபாய் களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மிதிகம ருவன் அந்நாட்டு பொலிஸாரினால் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார். சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பட்டியலில் அவரது பெயர் இருந்தது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...