பாராளுமன்ற இன்று புதன்கிழமை (22) கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் (14) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
மே,14 இல், வௌியிடப்பட்ட வர்த்தமானியில் ‘பொருளாதார நிலை மாற்றம்’ மற்றும் ‘பகிரங்க நிதிசார் முகாமைத்துவம்’ ஆகிய இரண்டு சட்டமூலங்களும் முதலாவது வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இதையடுத்து மு.ப. 9.45 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை எதிர்கட்சியால் கொண்டு வரப்படும் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை மேற்கொள்ள, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.