மின் துண்டிப்பால் இரண்டு இலட்சம் பேர் இருளில்

Date:

நாட்டில் சுமார் இரண்டு இலட்சம் பாவனையாளர்களின் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் நிலவும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக மின்சார இணைப்பை இன்னும் அவர்கள் மீளப் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அண்மைய காலப்பகுதியில் சுமார் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 8 பேரின் மின்சார கணக்குகள் மின்சார சபை மூலம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மின்சாரத்தை துண்டித்து 90 நாட்களுக்குள் மீண்டும் மின்சார தொடர்பை பெற்றுக்கொள்ளத் தவறும் பாவனையாளர்களின் மின்சார தொடர்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின்சார கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தாத காரணத்தால் மின் பாவனையாளர்களுக்கு 2022ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரையில் சுமார் 3 கோடிக்கு அண்மித்த சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மேலும், மின்சார கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்தாத காரணத்தினால் 13 இலட்சத்து 8 ஆயிரத்து 871 பேரின் மின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...