ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது !

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய ஆசிரியர் என்பதுடன் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்  இதுவரை 25 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இச் சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி இரவு அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வீட்டுக்கும் சொத்துக்களுக்கும் தீயிட்டுச் சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...