ரபாவில் அடைக்கலம் பெற்ற மக்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 45 போ் உயிரிழப்பு

Date:

ராஃபா நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இராணுவம்  நடத்திய வான்வெளித் தாக்குதலில் 45 போ் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுமாா் 1,000 போ் தங்கவைக்கப்பட்டுள்ள குறித்த அகதி முகாமில் கடந்த ஞாயிற்றுக் கிழமை குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலைத் தொடர்ந்து குறித்த அகதி முகாம் முழுதும் தீக்கிரையாகியுள்ளது எனவும், இதில் சிக்கி 45 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள் மற்றும் சிறுவா்கள் என்றும் காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத் தாக்குதலை இஸ்ரேல் இராணுவமும் உறுதி செய்துள்ளது.  இது குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ராஃபா பகுதியிலிருந்த ஹமாஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 2 ஹமாஸ் அமைப்பினா் கொல்லப்பட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டால் அல் சுல்தான் பகுதியில் உள்ள கூடாரங்களில் கொல்லப்பட்ட பலரும் உயிருடன் எரிந்திருப்பதாக பலஸ்தீன செம்பிறை சங்கத்தை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

‘நாம் இரவுத் தொழுகையை முடித்திருந்தோம்’ என்று உயிர் தப்பிய பலஸ்தீன பெண் ஒருவர் தாக்குதல் குறித்து நினைவுகூர்ந்தார். ‘எமது குழந்தைகள் உறங்கி இருந்தார்கள். திடீரென்று பெரும் சத்தம் கேட்டதோடு எம்மை சுற்றிய பகுதிகள் அனைத்தும் தீப்பற்றின. குழந்தைகள் கூச்சலிட்டார்கள்… அந்தச் சத்தம் பயங்கரமாக இருந்தது’ என்று அந்தப் பெண் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

அங்கு செயற்படும் செஞ்சிலுவை சங்கத்தின் மருத்துவமனை ஒன்றுக்கு தீக்காயங்களுடன் பலரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிர்களை காப்பதற்கு எம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம் என்று செஞ்சிலுவை சங்கம் கூறியது.

ரபா நகரின் மேற்காக உள்ள பிர்க்ஸ் முகாமை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அல் ஜசீரா செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த மே 24 ஆம் திகதி வானில் இருந்து பிடிக்கப்பட்ட படங்களில் ஐ.நா. களஞ்சியம் ஒன்றுக்கு அருகில் இங்கு பல நூறு கூடாரங்கள் இருப்பது தெரிகிறது.

சுமாா் 8 மாதங்களாக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...