முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடந்த ஒரு வருடத்துக்கு மேல் கடமையாற்றி பதவியுயர்வு பெற்றுச் செல்லுகின்ற பணிப்பாளர் பைஸல் ஆப்தீனுக்கான பிரியாவிடை நிகழ்வொன்று சர்வ மதங்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செவ்வாயன்று (14) முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இஸ்லாமிய மதத் தலைவர் கலாநிதி அஸ்ஸெய்யித் ஹஸன் மௌலானா அல்காதிரி, கிறிஸ்தவ மதத் தலைவர் கலாநிதி நிஷான் குரே பாதிரியார் இணைந்து சர்வமதத் தலைவர்கள் சார்பில் விடைபெற்றுச் செல்லும் பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் புதிய பதவி சிறப்பாக அமைவதற்காக இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, பௌத்த மதத்தலைவர்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக சேவையாற்றிய காலங்களில் முஸ்லிம் சமூகத்துக்கு பணிப்பாளர் செய்த சேவைகளை அவர்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்ததோடு ஏனைய மதங்களின் செயற்பாடுகளுக்கும் அவர் வழங்கிய பங்களிப்புக்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.