‘ஆரம்பம் ஜோரு அப்புறம் பாரு’ பழமொழியைப் போல மோடி ஆட்சி தாக்குபிடிப்பது கடினம் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியதற்காக இம்மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகித்து எழுச்சிமிகு பரப்புரை செய்த தமிழக முதல்வர் தளபதியார் ஸ்டாலின் அவர்களை நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
அவருடன் பொதுச்செயலாளர் மௌலா. நாசர், பொருளாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ ஆகியோரும் உடன் சென்றனர்.
அப்போது தேர்தல் முடிவுகள் குறித்தும், நடப்பு அரசியல் நிலவரம் குறித்தும் முதல்வருடன் மஜக தலைவர் அவர்கள் உற்சாகமாக கலந்துரையாடினர்.
அதன் பிறகு வெளியே நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தலைவர் அவர்கள்இ முதல்வரின் வெற்றி மாலையில் 40 முத்துக்கள் ஜொலிப்பதாக நாங்கள் கூறியிருந்ததை இப்போதும் அவரிடம் நினைவூட்டினோம் என்று கூறினார்.
என்.டி கூட்டணிக்கு நிதிஷ்குமாரும் சந்திரபாபு நாயுடுவும் வேகத்தடையாக இருப்பார்கள். ‘ஆரம்பம் ஜோரு அப்புறம் பாரு’ இந்த பழமொழி மோடிக்கு இப்போ முழுமையா பொருந்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.