இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் 1187 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

Date:

இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் 1187 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்  இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகார சபையின் சட்டப் பிரிவின் பணிப்பாளர் திருமதி சஜீவனி அபேகோன் தெரிவித்தார்.

ஊடக அமைச்சில் இன்று (19) இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், 907 குழந்தைகள் உடல் ரீதியான துஷ்பிரயோகம், 261 சிறிய பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் 146 தீவிர பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன.

அத்துடன் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாமை தொடர்பில் 704 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்தார்.

இங்கு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அவசர இலக்கமான 1929க்கு பெறப்பட்ட முறைப்பாடுகளில் 20% பொய்யான முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் சட்டத்தரணி வலியுறுத்தியுள்ளார்.

உண்மையான முறைப்பாட்டினை விசாரணை செய்வதற்கு அதிகாரிகளின் நேரமும் உழைப்பும் வீணடிக்கப்படுவதாகவும், அவ்வாறான பொய்யான முறைப்பாடுகளை செய்பவர்களுக்கு 175ஆவது தண்டனைச் சட்டம் பிரிவின் பிரகாரம் தவறான தகவல்களை வழங்கினால் தண்டிக்கப்பட முடியும் எனவும் சட்ட திணைக்கள பணிப்பாளர் திருமதி சஜிவனி அபேகோன் தெரிவித்தார்.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...