இந்தியாவில் இந்து, முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய ஹஜ்ஜுப் பெருநாள்!

Date:

இந்தியாவில் முஸ்லிம்களும் இந்துக்களும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை  ஒற்றுமை உணர்வோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.

200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதால், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் உலகின் மிகப்பெரிய முஸ்லிம்-சிறுபான்மை மக்கள் வாழ்கின்றனர்.

இஸ்லாத்தில் கடைப்பிடிக்கப்படும் இரண்டு முக்கிய பெருநாளில் இரண்டாவது ஈத் அல்-ஆதாவின் பெருநாள் கொண்டாட்டங்களுக்காக இந்திய முஸ்லிம்கள் இன்றைய தினம் நாடு முழுவதும் பிரார்த்தனைகளில் இணைந்தனர்.

தனது மகனைப் பலியிடுமாறு கடவுளால் கட்டளையிடப்பட்டபோது,  ​​​​நபி இப்ராஹிம் அவர்களின் நம்பிக்கையின் சோதனையையும் தியாகத்தையும் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் நினைவுகூருகிறது.

இதன்போது, ‘ஈத் எங்களுக்கு மிகவும் புனிதமான பண்டிகை. அருகிலுள்ள மசூதியில் காலை பிரார்த்தனையுடன் இந் நாளை தொடங்கினோம், பின்னர் நாங்கள் ஆட்டை பலியிட்டோம் என்று டெல்லியில் வசிக்கும் முகமது அல்தாஃப் அரபு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒரு மிருகத்தை, அதாவது ஒரு ஆடு,செம்மறி அல்லது மாட்டை அறுத்து, உறவினர்கள் மற்றும் ஏழைகளுக்கு அந்த இறைச்சியை விநியோகிக்கிறார்கள்.

மேலும், ‘எனது அண்டை வீட்டார் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் எமது உணவு விருந்திற்கும்  அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்’ அது மட்டுமல்ல, பலியிடப்பட்ட விலங்குகளின் இறைச்சியை எங்கள் உறவினர்கள் மற்றும் இந்து நண்பர்களுக்கும் விநியோகிக்கிறோம். இந்த இறைச்சி மிகவும் புனிதமானது, அதை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள், என்று அல்தாஃப்  மேலும் கூறினார்.

இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில் நாங்கள் தயாரிக்கும் உணவு விருந்தில் பங்கேற்க சமூகம் மற்றும் வெளியில் உள்ள இந்து நண்பர்களை அழைப்பது பல ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது.’

2014ல் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் பெரும்பான்மைக் கொள்கைகளால் பற்றவைக்கப்பட்ட பதட்டங்கள் மற்றும் கலவரங்களுடன் கடந்த பத்தாண்டுகளில் இந்திய முஸ்லிம்கள்  பாகுபாடுகளையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளனர்.

வன்முறை சம்பவங்கள் இருந்தபோதிலும்,  ‘இந்தியாவின் மதச்சார்பற்ற உணர்வை’ உயிர்ப்புடன் வைத்திருக்க, ‘ஒன்றாகப் பண்டிகையைக் கொண்டாடுவதாக அல்தாஃப் நம்புகிறார்.

‘இந்தியாவில், ஈத் ஒரு மதத்தின் பண்டிகை அல்ல. இங்கு அனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவர்  விழாக்களில் பங்கேற்கின்றனர்.

ஈத் அன்று, எங்கள் இந்து மற்றும் சீக்கிய நண்பர்களை எங்களுடன் உணவருந்தவும், உணவு தயாரிப்பதற்கும் அழைக்கிறோம். இது நமது சமூக உணர்வை வலியுறுத்துவதற்கும், நமது வகுப்புவாத பிணைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது எனவும் அவர் அரப் நியூஸிடம் கூறினார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...