ஈரானில் ஜனாதிபதித் தேர்தல் நாளை

Date:

ஈரான் நாட்டில் நாளை வெள்ளிக்கிழமை (28) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் கிழக்கு அஸர்பைஜானுக்கு அருகிலுள்ள ஜோல்பா பகுதியில் கடந்த மாதம் (05) 19 ஆம் திகதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்ட 09 பேர் உயிரிழந்தனர்.

அரசியலமைப்பின் 131 ஆவது பிரிவின்படி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை இடைக்கால ஜனாதிபதியே நியமிக்கப்பட வேண்டும் என்ற பின்னணியில் முதல் துணை ஜனாதிபதியாக பணிபுரியும் முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும் 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்ற அரசியமைப்பின் பிரகாரம் நாளை (28) தேர்தல் நடைபெறவுள்ளது.

உள்நாட்டு அதிருப்தி மற்றும் பிராந்திய கொந்தளிப்புகளுக்கு மத்தியில் இடம்பெறவுள்ள இந்த வாக்கெடுப்பு இஸ்லாமிய குடியரசை புதிய தலைமைத்துவத்திற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பதவிக்கு போட்டியிடுவதற்கு 04 பெண்கள் உட்பட 80 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்த கார்டியன் கவுன்சில் 74 பேரின் விண்ணப்பங்களை நிராகரித்தது.

ஜனாதிபதி வேட்பாளர்கள் கார்டியன் கவுன்சில், 12 சட்ட வல்லுநர்கள் மற்றும் மதகுருமார்கள் கொண்ட குழுவால் கடுமையாக சரிபார்க்கப்படுகிறார்கள்.

இத்தேர்தலில் 80 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை 06 ஆகக் குறைத்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஏழு பெண்கள், ஒரு முன்னாள் ஜனாதிபதி மற்றும் பல அரசாங்க அதிகாரிகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளனர்.

இதன்படி, 06 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை கடந்த 09 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அதில், முகமது பாகர் கலிபாப், சயீத் ஜலிலி, மசூத் பெஜெஷ்கியான், முஸ்தபா பூர்மொஹம்மதி, அமீர்உசைன் காசிசாதே ஹாஷமி மற்றும் அலிரேசா ஜகானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...