பலஸ்தீனர்களை நாம் துச்சமாக மதித்தோம் அவர்களின் பிரச்சனையை தீர்க்காமலேயே விட்டுவிடுவோம் என நம்பினோம், எமக்கு எதிராக எதுவுமே செய்யமுடியாது என்று நம்பினோம், காரணம் நாம் தான் இந்த உலகிலேயே அதிக பலம் வாய்ந்தவர்கள் என்ற மமதை, இறுதியாக நடந்திருப்பது என்ன? பலஸ்தீனியர்கள் எமக்கு சவாலாக மாறிவிட்டார்கள் என முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மெர்ட் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இஸ்ரேல் பிரதமருடன் முன்னாள் உளவுத்துறை பிரதானி ஷெரோன் ப்ளும் நடத்திய Podcast நிகழ்ச்சியில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது ‘எமது காற்சட்டையையே கழற்றிவிட்டார்கள். அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகளையும் திட்டங்களையும் நாம் முன்னரே அறிந்து வைத்திருந்தோம். ஆனால் அவற்றை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திவிட்டோம்.
விளைவு என்னவென்றால் வெறும் 5000 பலஸ்தீனியர்கள் எமக்கு பாடம் புகட்டிவிட்டார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் 2008 இல் பிரதமராக இருந்தபோது, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க விரும்பினேன். காசா பகுதியை எவ்வாறு கைப்பற்றுவது மற்றும் ஹமாஸை அகற்றுவது எப்படி என்பது குறித்து நான் ஒரு ஒழுங்கான திட்டத்தை வைத்திருந்தேன், ஆனால் தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு எனது திட்டத்திற்கு எதிர்ப்புகள் இருந்ததால் அது நிறுத்தப்பட்டது,’ என்றும் அவர் கூறினார்.