கடும் மழையால் கண்டி மாவட்டத்தில் 3200 பேர் பாதிப்பு!

Date:

மத்திய மலையகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தில்  700 குடும்பங்களைச் சேர்ந்த 3200 பேர்  வரை பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதி பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக மத்திய மலையகத்தில் கடும் மழை பெய்து வருவதால் கண்டி மாவட்டத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சீரற்ற வானிலை காரணமாக  மாவட்டத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்  650 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகளில் ஆபத்தான  நிலையில் 4000  மரங்கள் காணப்படுவதாகவும் அவற்றை  அகற்றுவதற்கு பிரதேச செயலகங்களுடன்  இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்’

கண்டி மாவட்டத்தில் கங்க இஹலபோரலய, கங்க வட்டகோரலய, உடுநுவரை, யட்டிநுவரை, உடதும்பறை, பாத்த்தும்பறை போன்ற பிரதேச செயலக பிரிவுகள் கூடுதலான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...