காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்: கடந்த 24 மணித்தியாலங்களில் 47 பாலஸ்தீனியர்கள் பலி

Date:

காசாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 47 பலஸ்தீனியர்கள்  கொல்லப்பட்டுள்ளதுடன் 57 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவின் பல நகரங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்தும் வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில் காசாவின் பல பகுதிகளில் உள்ள மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரை 37,765 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 86,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், போரினால் காணாமல் போன சிறுவர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்களை பிரிந்து தவித்து வருவதால் அவர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர் அலெஸ்சான்ரா சையே வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...