சகவாழ்வை ஏற்படுத்தும் வகையில் கேகாலை ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற ‘திறந்த பள்ளிவாசல் நிகழ்வு’!

Date:

கேகாலை நகர ஜும்ஆ மஸ்ஜிதுன் பள்ளிவாசலில் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு (Open Mosque day) நேற்று (25) சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு கேகாலை மாவட்ட செயலகம் (முஸ்லிம் கலாச்சார பிரிவு), இஸ்லாமிய கற்கை மையத்தின் நல்லிணக்க மையம், கேகாலை மாவட்ட முஸ்லிம் சம்மேளனம், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் செயற்பாட்டு மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்கள், சமயத் தலைவர்கள், கேகாலை மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள், இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சகோதர இன மக்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்ளும் வகையிலும், அவர்கள் மத்தியில் இஸ்லாம் தொடர்பாக இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும், சமூக மற்றும் இன ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, பள்ளிவாசல்களில் தொழுகைகள், குத்பா உரைகள், குர்ஆன் ஓதுதல் மருதாணி இடுதல், அரபு எழுத்தணி,சமய நிகழ்வுகள், இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யதல் போன்ற விடயங்களை நேரடியாக தெளிவுபடுத்தும் நிகழ்வாகவும் அமைந்திருந்நதன.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...