சீரற்ற வானிலையால் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

Date:

 

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இரண்டு 212 ரக உலங்கு வானூர்திகளும், பெல் 412 ரக உலங்குவானூர்தி ஒன்றும் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மண்சரிவு அபாயம் அதிகமாக உள்ளதால், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையின் அடிப்படையில் வெளியேறத் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...