சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (04) கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 41 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 23 மாவட்டங்களின் 262 பிரதேச செயலகப் பிரிவுகளில் 33,422 குடும்பங்களைச் சேர்ந்த 130,021 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரமித தென்னகோன் தெரிவித்தார்.

அந்தந்த பகுதிகளில் 116 பாதுகாப்பு மையங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.

2,368 குடும்பங்களைச் சேர்ந்த 9,248 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...