ஜனாதிபதி, நீதியமைச்சரின் கருத்துக்கள் நீதித்துறையை அச்சுறுத்துகின்றன: சட்டத்தரணிகள் அமைப்பு

Date:

பால்நிலை சமத்துவ சட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக தெரிவித்த கருத்துக்களும் நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்களும் நீதித்துறையை அச்சுறுத்தும் தன்மை கொண்டவை என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி நீதியமைச்சர் கல்வியமைச்சர் ஆகியோர் நிறைவேற்று அதிகாரத்தின் முழுமையான பிரதிநிதிகள் என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும் முக்கிய அரசமைப்பு அதிகாரம் மற்றும் பொறுப்பை ஜனாதிபதி செயற்படுத்துகின்றார் எனவும் நீதியமைச்சர் நீதித்துறையின் வளங்களை கட்டுப்படுத்துகின்றார் எனவும் சட்டத்தரணிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி உயர்நிறைவேற்று அலுவலகம் நீதித்துறை குறித்து நயவஞ்சகமான கடுமையான கருத்துக்களை வெளியிடுவது தெளிவான அதிகார துஸ்பிரயோகமாகும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆக்கபூர்வமான விமர்சனம் நியாயமான கருத்து மற்றும் கருத்துவேறுபாடுகள் அனைத்தும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையின் சரியான வடிவங்கள் என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் அமைப்பு கருத்துவேறுபாடு அச்சுறுத்தலாகவோ மிரட்டலாகவோ மாற முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

தேர்தலிற்கு முன்னர் இவ்வாறான கருத்துக்கள் வெளியாவது அரசியல் ரீதியில் பயனற்றவை என கருதுவதாக தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் அமைப்பு நீதித்துறை மற்றும் ஜனநாயக செயல்முறைகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கச்செய்பவையாக இவை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...