ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு

Date:

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் பேருந்து ஒன்று கட்டுப்பாடு இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று இந்தியாவின் பிரதமராக  நரேந்திர மோடி பதவி ஏற்றபோது தாக்குதல் குறித்து தகவல்கள் வெளியாகின.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு வலுவாக இல்லை என்பதை இத்தாக்குதல் காட்டுவதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கரிஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

தாக்குதல் நடத்திய குழுவினர் பேருந்தைச் சுற்றி வளைத்தனர். அதை நோக்கி அவர்கள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து, பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்,” என்று ஜம்மு காவல்துறை உயர் அதிகாரி மொஹித்தா ஷர்மா தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் யார் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றும் அவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்தில் இருந்தவர்கள் சிவ கோரி குகைக் கோயிலில் இருந்து ரியாஸி மாவட்டத்தில் உள்ள கத்ராவுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்ததாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...