தேர்தல்கள் ஆணைக்குழு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை!

Date:

ஜனாதிபதி தேர்தலுக்கு இணைத்துக் கொள்ளக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் பயன்படுத்தக்கூடிய அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

எதிர்வரும் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் பங்குபற்றக்கூடிய அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்பில் உரிய ஆவணங்கள், பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  ரத்நாயக்க தெரிவித்தார்.

மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் ஊடாக குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் வாகனங்கள் குறித்த தகவல்களும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. அதற்கான விசேட படிவமும் வெளியிடப்பட்டுள்ளதாகவும்  ரத்நாயக்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...