பாலின சமத்துவம் தொடர்பான சட்ட மூலத்தால் பாரிய விளைவுகள் ஏற்படும்!

Date:

பாலின சமத்துவம் தொடர்பான சட்டமூலம் நாட்டில், அமுல் படுத்தப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாலின சமத்துவம் தொடர்பான சட்டமூலம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டால்  ஆணை பெண்ணாகவும்,  பெண்ணை ஆணாகவும்  மாற்ற முடியும். இந்த வகையான ஒரு நடவடிக்கை இன்று நாட்டில் பாரிய வர்த்தகமாக தோற்றம் பெற்றுள்ளது.

இந்த சட்டமூலத்தை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். வெளிநாடுகளில் பெற்றோர்களின் அனுமதி இன்றி சிறுவர்களிடம் சிறுமியாக மாற விருப்பமா அல்லது சிறுமிகளிடம் சிறுவனாக மாற விருப்பமா என்று கேள்வி எழுப்படுகின்றது.
ஆணை பெண்ணாக்குவதற்கு 4 ஆயிரம் டொலர் வசூலிக்கப்படுகின்றது.

இது மிகப்பெரிய வர்த்தகமாக இன்று உருவெடுத்துள்ளது. இந்த நாடு பௌத்த மதத்தோடு பின்னிப்பிணைந்த நாடு.

எமக்கு எந்தவொரு வெளிநாட்டு சக்திகளும் இது தொடர்பாக விளக்கம் தரவேண்டிய அவசியம் இல்லை. இந்த சட்டமூலத்தின் ஊடாக ஆரோக்கியமாக உள்ள ஒரு ஆணை பெண்ண மாற்ற முடியும்.

எனவே இதனை நாம் எதிர்க்கின்றோம். இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்கின்ற அனைத்து ஆண்களும்  பெண்ணாக மாறுவதற்கு தயார் என்ற செய்தியை ஏற்றுக்கொள்ளவேண்டும்” இவ்வாறு விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...