புத்தளத்தில் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

Date:

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை மற்றும் புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பு ஒண்றிணைந்து ஏற்பாடு செய்த கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான பாடநெறி தெரிவு செய்தல் தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு 20.06.2024 வியாழக்கிழமை மாநகர சபை கே.எ.பாயிஸ் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சுய பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வுக்கு புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் M.R. Sawwaf தலைமை தாங்கினார்.

உலமா சபை நகரக் கிளையின் தலைவர் Ash-Sheikh M. B. M. Jifnas (Al-Misbahi) , கல்வியின் முக்கியத்துவம் பற்றிய சில கருத்துக்களை முன்வைத்தார்.

வளவாளராக கலந்து கொண்ட ,திறன் விருத்தி அபிவிருத்தி அதிகாரி
S. A. M. Farraj (Islahil), பல்கலைக்கழக கற்கை நெறிகள் ஏன் அவசியம் என்ற தலைப்பில் ஒரு விளக்கவுரையை வழங்கினார்.

மற்றொரு வளவாளரான திறந்த பல்கலைக்கழக பேராசிரியர், வஸ்தியம் பிள்ளை சிவலோகதாசன் பல்கலைக்கழக பாடநெறிகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.

இறுதியாக புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பு உறுப்பினர்களால் பல்கலைக்கழக பாடநெறியை தெரிவு செய்வது எவ்வாறு என்பது தொடர்பான
கலந்துரையாடல் இடம் பெற்றது.

பயனுள்ள ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உலமா சபை நகரக் கிளை உறுப்பினர்களும் இளம் பட்டதாரிகள் அமைப்பினரும் பாராட்டுக்குரியவர்கள்!

 

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...