பேதங்களை மறந்து ஒற்றுமையாக ஒன்றிணைவது கடமையென்பதை ஹஜ் உணர்த்துகின்றது: இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஹஜ் பெருநாள் செய்தி

Date:

ஹஜ் பெருநாள் என்பது உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் தங்களது நாடு, நிறம்,கொள்கைகள்,பேதங்கள் அனைத்தையும் மறந்து ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதை ஞாபகப்படுத்துகிறது.

இந்த முயற்சிக்காக தான் இஸ்லாமிய ஐக்கிய பேரவை இலங்கையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறது.

இந்நாளில் ஹஜ் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்களான ஸெய்யித் சாலிம் ரிபாய் மௌலானா, அஸ்ஸெய்யித் ஹஸன் மௌலானா அல்காதிரி, அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் முஜீப் (கபூரி), பியாஸ் முஹம்மத், பேரவையின் 37 அங்கத்துவ அமைப்புக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முன்னாள் நீதிபதி அப்துல் கபூர் தலைமையிலான யாப்பு உருவாக்கக் குழு அனைவரும் தமது வாழ்த்துக்களை முஸ்லிம் சமூகத்துக்கு தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களோடு ஒன்றிணைந்து பயணிப்பது ஒற்றுமையின் பலத்தை இன்னும் பலப்படுத்துவதற்கு ஹஜ்ஜுப் பெருநாளை ஒரு சந்தர்ப்பமாக அமைத்துக்கொள்ள வேண்டும், எமது அயலவர்கள் முஸ்லிம்களாகவும் அல்லது முஸ்லிமல்லாத பௌத்த, இந்து, கிறிஸ்தவ மதத்தவர்களாக இருக்கலாம்.

அவர்களையும் எம்மோடு அனுசரித்து அவர்களுடனும் இணைந்து ஹஜ்பெருநாளையும் உபசரிப்புக்களையும் கைமாறிக்கொண்டு ஒற்றுமையை பலப்படுத்துவதற்கு அனைவரும் பணிவோடு பண்போடு நடந்துகொள்ளவேண்டும்.

மேலும் அன்பை வெளிப்படுத்தக்கூடிய சிறந்த நாளாகவும் சமாதானத்தை கட்டியெழுப்பக்கூடிய நாளாகவும் ஹஜ் ஜுப்பெருநாளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன் ஹஜ்ஜுப்பெருநாள் நல்லதொரு முன்மாதிரியாக அமைய அல்லாஹ்வும் ரசூலும், இஸ்லாமும், குர்ஆனும் ஹதீஸும் கற்றுத் தந்த பிரகாரம் இமாம்கள், ஆசிரியர்கள்,உஸ்தாத்மார்கள், மார்க்கத்தையும் அறிவையும் கற்றுத் தந்தவர்கள் என்ற முறையில் அதன் அடிப்படையில் இந்த ஹஜ் பெருநாளை நல்ல முறையில் கொண்டாடி  சிறந்ததொரு திருநாளாக மாற்றிக்கொள்வோம் எனவும் இஸ்லாமிய ஐக்கிய பேரவை தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...