பொசன் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவை

Date:

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்தின் புனித பூமியை வழிபட வரும் பக்தர்களுக்காக இன்று முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அநுராதபுரம் புனித பூமிக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக  அநுராதபுரத்திற்கு வருகை தரும்  மக்களுக்காக மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

இதேவேளை பொசன் தினத்தினை முன்னிட்டு 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...