லாப் சமையல் எரிவாயு விலையும் இன்று செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,680 ரூபாவாகும்.
5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 65 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,477 ரூபாய் என லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.