விவசாயத் துறை மேம்பாட்டிற்காக இலங்கை மற்றும் ஓமானுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

Date:

இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் இலங்கை மற்றும் ஓமானுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் ஓமான் தூதுவருக்கும் இடையில் நேற்று இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ விஜயங்கள், ஆய்வுகள் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி, ஏற்றுமதிக்கு வலுச்சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை விவசாய அமைச்சர் மதிப்பீடு செய்து இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்குவார் என ஓமான் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓமானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை என அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.

அத்துடன் இது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...