சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “பசுமையான தேசத்தை அமைப்போம்” எனும் தொனிப்பொருளில் ஹுஸைனியாபுரம் நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பினரால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது (06) இடம்பெற்றது.

எமது பிரதேசத்தை பழம் தரும் மரங்களைக் கொண்டும், நிழல் தரும் மரங்களைக் கொண்டும் பசுமையாக்குவதோடு வளப்படுத்தும் நோக்கோடு இது ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது எமது பிரதேசத்தில் இயங்கி வருகின்ற உலுக்காப்பள்ளம் பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பினர் , கரம்பை இளைஞர் கழகம் மற்றும் அல் பலாஹ் விளையாட்டு கழகம் போன்ற அமைப்பினருக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

