இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்றுமுன் இலங்கை வந்தடைந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
இலங்கைக்கு வருகை தரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது தூதுக்குழுவினர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் சந்திப்பார்கள்.