ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இரத்தினபுரியில் நாளை (5) நடைபெறவிருந்த உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வு அனர்த்த நிலைமை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
சிங்கராஜ வனப்பகுதியின் நுழைவாயில் அமைந்துள்ள இரத்தினபுரி குடாவ பகுதியில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவிருந்த நிகழ்வு சீரற்ற காலநிலை காரணமாக அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரியில் தற்போது நிலவும் வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக நாளை ஜனாதிபதி செயலகத்தின் புதிய மைதானத்தில் விழாவைக் கொண்டாடுவதற்கு சுற்றாடல் அமைச்சு ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.