இஸ்ரேலில் வேலைவாய்ப்பை தருவதாகக் கூறி பெருந்தொகையான மக்களிடம் சுமார் 05 கோடி ரூபாவை மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவரைக் கைது செய்துள்ளது. இப்பெண் குறித்து 53 பேர் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதையடுத்து இவரைக் கைது செய்யும் ஏற்பாடுகளில் குற்றப்புலனாய்வு பிரிவினர் இறங்கினர். முறைப்பாட்டாளர்களிடமிருந்து மாத்திரம் நான்கு கோடியே 64,300 ரூபாவை இச்சந்தேக நபர் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.