ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்: விரிவான விசாரணைகளுக்கான புதிய குழு ஜனாதிபதியால் நியமனம்

Date:

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான விசேட குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸ் தலைமையிலான குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, இந்தியப் புலனாய்வுத் துறையிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள், வவுணத்தீவு கொலை விவகாரத்துடன் எல்.டீ.டீ.ஈ அமைப்பினர் தொடர்பு பட்டிருந்தாக இராணுவ புலனாய்வுச் சபையினால் (DMI)அறிவிக்கப்பட்டமை தொடர்பிலும் விசாரணை நடத்தவுள்ளது.

இக்குழுவின் அறிக்கையை செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னதாக பெற்றுத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...