உலகில் பறவைக் காய்ச்சலால் பதிவான முதலாவது மரணம்!

Date:

மெக்சிகோவில் நபர் ஒருவர் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பறவைக் காய்ச்சலால் உலகில் பதிவான முதல் மனித மரணம் இது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிரிழந்த 59 வயதான குறித்த அந்த நபருக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மெக்சிக்கோவின் ஏனைய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் வெளிப்பாடு தற்போது அறியப்படவில்லை என்றாலும், மெக்சிக்கோவில் உள்ள கோழிகளில் A(H5N2) வைரஸ்கள் பதிவாகியுள்ளன” என்று உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பறவை காய்ச்சல் பரவல் முதலில் மார்ச் மாதத்தில் Michoacan மாகாணத்தில் கோழிகளைப் பாதித்தன. தொடர்ந்து மெக்ஸிகோவின் மற்ற மாநிலத்திலும் பறவைக் காய்ச்சல் பரவல் அடையாளம் காணப்பட்டது.

முதல் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தாலும் கோழிகளில் இருந்து மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்படும் ஆபத்து குறைவாகவே உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.

 

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...