மத்திய மலையகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தில் 700 குடும்பங்களைச் சேர்ந்த 3200 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதி பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக மத்திய மலையகத்தில் கடும் மழை பெய்து வருவதால் கண்டி மாவட்டத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சீரற்ற வானிலை காரணமாக மாவட்டத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் 650 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகளில் ஆபத்தான நிலையில் 4000 மரங்கள் காணப்படுவதாகவும் அவற்றை அகற்றுவதற்கு பிரதேச செயலகங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்’
கண்டி மாவட்டத்தில் கங்க இஹலபோரலய, கங்க வட்டகோரலய, உடுநுவரை, யட்டிநுவரை, உடதும்பறை, பாத்த்தும்பறை போன்ற பிரதேச செயலக பிரிவுகள் கூடுதலான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.