ருவாண்டா நாட்டில் மாட்டு சாணம் மூலம் செய்யப்படும் கலை பொருட்கள் உலகம் முழுக்க பிரபலமாகியுள்ளது.
ருவாண்டா நாட்டு பெண்களின் குடிசைத் தொழிலாக கருதப்படும் ‘இமிகாங்கோ ஓவியம்’ என்று அழைக்கப்படும் இந்த மாட்டு சாண ஓவியத்தை வாங்க உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆப்பிரிக்காவின் குறைவான மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய நாடு ருவாண்டா. ருவாண்டா நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு பேர் பெண்கள் ஆவார். உலகிலேயே பாராளுமன்றத்தில் பெண்கள் பங்கு அதிக அளவில் உள்ள நாடும் ருவாண்டா நாடுதான். அதேபோன்று இயற்கையையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்றுவதில் அதிக ஆர்வம் கொண்ட நாடு.
இந்த கலை இப்போது, ருவாண்டாவின் நைரகாம்பி பகுதியில் அதிக அளவில் கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் ஆயிரக்கணக்கில் இதை செய்கிறார்கள். இது முதன் முதலாக 18ம் நூற்றாண்டில் உருவானது.
அந்நாட்டின் அரசன் கிகாம்பியின் மகள் காகிறா இதை மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அப்போதிலிருந்து மக்கள் இதை செய்து வருகிறார்கள்.
1994ல் நடந்த ருவாண்டா இனப்படுகொலை போரில் மக்கள் எல்லாவற்றையும் இழந்தார்கள். அப்போது அவர்கள் இந்த கலையையும் இழந்து இருக்கிறார்கள்.
ஆனால் 2000ல் இந்த கலை மீண்டும் உயிர் பெற்றது. இப்போது இது பெரிய அளவில் வியாபாரமாக மாறி மக்களுக்கு அதிக வருமானம் ஈட்டி தருகிறது. அந்த போர் சின்னங்களையும் அவர்கள் இந்த கலையில் வெளிப்படுத்துகிறார்கள்.
இனப்படுகொலையில் தப்பிய பெண்களால் உருவாக்கப்படும் இந்த பாராம்பரிய கலைப்படைப்பின் மூலம் அதிக வருமானம் ஈட்டப்படுவதுடன் ருவாண்டா பெண்கள் உலகெங்கும் வாழும் பெண்களுக்கு முன்மாதிரியாகவும் காணப்படுகின்றார்கள்.
இந்த கலை இமிகாங்கோ ஓவியம் என்று அழைக்கப்படுகிறது. இதை மாட்டு சாணத்தை வைத்து செய்கிறார்கள். சாணத்தை தண்ணீர் ஊற்றி பதப்படுத்தி, அதில் வண்ணம் சேர்த்து, கெட்டியான பெயிண்ட் போல மாற்றுகிறார்கள். கலர் கலர் சிமெண்ட் போல இருக்கும் இதை வைத்து சுவற்றில் மாற்றும் வகையில் அழகான கலை பொருட்களை ருவாண்டா மக்கள் உருவாக்குகிறார்கள்.
உலகின் 5 நட்சத்திர ஹோட்டல்களில் இந்த ஓவியங்களை வைக்க
விரும்பி வாங்கி செல்கிறார்கள்.