‘காசாவில் பட்டதாரிகள் இல்லை’: பலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஸ்டான்போர்ட் மாணவர்கள் பட்டமளிப்பு விழாவிலிருந்து வெளியேறினர்!

Date:

அமெரிக்கா கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தை நடத்தி பட்டமளிப்பு விழாவிலிருந்து வெளியேறினர்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக தலைவர் ரிச்சர்ட் பட்டம் பெறும் விழாவில் தனது உரையை ஆற்றும்போது, மாணவர்கள் பலர் பலஸ்தீனியக் கொடிகளை அசைத்து, தங்கள் நாற்காலிகளில் இருந்து எழுந்தனர்.

சில நிமிடங்களில், நூற்றுக்கணக்கானோர் மைதானத்திலிருந்து வெளியேறினார்கள். பட்டமளிப்பு விழாவில் சுமார் 2000 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது சுமார் 400 மாணவர்கள் பட்டம் பெற மறுத்து அந்த பகுதியை விட்டு வெளியேறினர்.

காசா பகுதியில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு அமெரிக்கா அளித்த ஆதரவிற்கு உலகநாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்து வருகிறன.

இந்த நாட்களில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், அமெரிக்காவில் மட்டுமல்ல, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும், பல்கலைக்கழக மாணவர்கள் கூட காசாவில் இனப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நடந்த இந்த சம்பவம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

‘கடந்த ஒன்பது மாதங்களாக, ஸ்டான்போர்டில் உள்ள மாணவர்கள், காசா பகுதியில் நடந்து வரும் வன்முறை மற்றும் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழகம் விலக வேண்டும் என்று கோரி, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்’

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...