கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்க நடவடிக்கை!

Date:

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இலவசப் பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் 50,000 பேருக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்ததுடன் அதற்கேற்ப இந்த உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 22 குடியிருப்புகளில் 14559 வீடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.இது தவிர தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை 1070 பத்திரங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, முதற்கட்டமாக, மிஹிந்து சென்புர, சிறிசர உயன, மெட்சர உயன, லக்முத்து செவன, சிறிமுத்து தோட்டம் ஆகிய திட்டங்களை மையப்படுத்தி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக லக்ஸந்த செவன, ரந்திய உயன, லக்முத்து உயன, முடோர உயன, சியசத செவன, புரடோர செவன, ஜயமக செவன, மிஹிஜய செவன, ஹெலமுத்து செவன, சியபட செவன, லக்சேத செவன, லக்கிரு செவன ஆகிய வீட்டுத் திட்டங்களுக்கு முன் உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...