கொடூரமாக தாக்கப்பட்ட சிறுவன்: சந’தேகநபர் வெளிஓயாவில் கைது

Date:

சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிஓயா பொலிஸார், முல்லைத்தீவு பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து இன்று (05) அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதே சந்தேக நபர்கள கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது தாக்குதலுக்குள்ளான சிறுவனும் இவர்களுடன் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவன் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, சிறுவனின் தந்தை என கருதப்படும் 45 வயதுடைய ஆண் ஒருவரும், 46 மற்றும் 37 வயதுடைய பெண்கள் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் வெலிஓயா பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...