சீரற்ற வானிலை: பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்த விசேட அறிவிப்பு

Date:

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலைதொடர்வதால், நாளைய தினம் (03) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து, மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடும் மழையுடனான வானிலையினால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மணித்தியாலங்களில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...