சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது சிறுவன் மொஹமட் ஷம்லான்

Date:

பீபில்ஸ் ஹெல்பிங் பவுண்டேஷனுடன் இணைந்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய உலக சாதனை நிகழ்வில், மூன்று வயது சிறுவன் சாதனை படைத்துள்ளான்.

1098  உருவப்படங்களை அடையாளம் காட்டி, அவற்றின் பெயர்களையும் இச்சிறுவன் கூறியதால் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.

கம்பஹா மாவட்டத்தின் ஹுனுப்பிடிய பகுதியில் வசித்துவரும் மொஹமட் ஷபான் மற்றும் பாத்திமா இபாஸா ஆகியோரின் மகனான மூன்று வயது மொஹமட் ஷம்லான் என்ற சிறுவனே  இப்புகழை ஈட்டியுள்ளார்.

எண்கள், பூக்கள், பழங்கள், பறவைகள், விலங்குகள், தானியங்கள், மரக்கறி  வகைகள், மனித உடலின் உள் உறுப்புகள், ஊர்வன, பூச்சிகள் பூக்கள், மீன்கள்,  சிங்கள, ஆங்கில, அரேபிய மொழி எழுத்துகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு  தொழில்கள், உலகப் புகழ் பெற்ற கோபுரங்கள், புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள்,  தேசிய வீரர்கள், உணவு வகைகள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என 1098  உருவப் படங்களை அடையாளம் காட்டி அவற்றின் பெயர்களை மனப்பாடமாகக்  கூறி,  இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.

இதனால்,உலகின் அதிக  ஞாபகத் திறமையுள்ள சிறுவன் என்ற பெயர் இவருக்கு கிடைத்துள்ளது.

இச்சிறுவனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம்,நினைவுக்  கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவை  இச்சிறுவனுக்கு வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...