ட்ரோன்கள் மூலம் நுளம்பு ஒழிப்பு மருந்து தெளிப்பு

Date:

மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை கவனத்திற்கொண்டு, டெங்கு பரவும் இடங்களை அழிப்பதற்கு ட்ரோன்கள் மூலம் நுளம்பு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுமென கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பி.கே. புத்திக மகேஷ் தெரிவித்தார்.

மேல்மாகாண டெங்கு கட்டுப்பாட்டுக் குழுவின் ஆலோசனையின் பேரில், விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் இப் பணியை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரியின் 05 பிரிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 06 பிரிவுகளும் களுத்துறை மாவட்டத்தில் 08 பிரிவுகளும் வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...