தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி என 40 நாடாளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இதேவேளை, பா.ஜ., சார்பில் களமிறங்கிய கோவையில் – அண்ணாமலை, நீலகிரியில் – எல்.முருகன், தென் சென்னையில் – தமிழிசை சௌந்திரராஜன், நெல்லையில் – நயினார் நாகேந்திரன், இராமநாதபுரத்தில் சுயேச்சையாகக் களமிறங்கிய – பன்னீர்செல்வம், தேனியில் அ.ம.மு.கவின் – டிடிவி தினகரன் ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
இதேவேளை பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவை காப்போம் என்ற முழக்கத்துடன் பரப்புரையை தொடங்கினோம் , தற்போது ஆட்சியமைக்க பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு எதிரான மக்களின் இந்த தீர்ப்பே எங்கள் கூட்டணியின் வெற்றி, ஜனநாயகத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை திமுக மேற்கொள்ளும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.