தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் தேவை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

Date:

நாம் மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நமக்கு அதிமாக தேவைப்படுவது நல்ல தலைவர்கள் தான் என நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்  தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் 2024 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது விழாவினை இன்று (28) நடாத்துகின்றது.

இது தொடர்பில் கட்சி தலைவர் விஜய் மேலும் தெரிவிக்கையில்,  உங்களுக்கு பிடித்த துறை தேர்வு செய்துகொள்ளுங்கள். வீட்டில் உள்ள பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் கலந்து பேசி நல்ல துறையை தேர்வு செய்யுங்கள்.

நாம் ஒரு துறையை தேர்வு செய்யும்போது அதில் எவ்வளவு தேவை இருக்கின்றன என்பதைப் பார்ப்போம். மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், மருத்துவர்களும், பொறியாளர்களும், வழக்குரைஞர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள். இன்றைக்கு நமக்கு அதிமாக தேவைப்படுவது நல்ல தலைவர்கள் தான்.

தலைவர் என்பது அரசியல் ரீதியாக மட்டுமல்ல. எந்தத் துறையில் சிறந்து விளங்கினாலும் அந்தந்த துறைகளில் தலைமைப் பதவிக்கு வர முடியும்.

எதிர்காலத்தில் அரசிலும் கூட ஒரு வேலைவாய்ப்பு வழிகாட்டியாக இருக்கலாம். நன்கு படித்தவர் அரசியலுக்கு வர வேண்டும். நல்ல தலவர்கள் வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

சமூக வலைதளத்தில் ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும் பொய் பிரசாரங்களை மாணவர்கள் நம்பக் கூடாது. அது சில நேரங்களில் புரளியாக கூட இருக்கலாம்” என்றார்.

இதன்போது, மாணவர்கள் நல்ல நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும் சுய ஒழுக்கம் கட்டுப்பாடு அவசியம் என்றும் தற்காலிக மகிழ்ச்சிக்கு போதை பழக்கங்களுக்கும் அடிமையாகக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், ‘say no to drugs’ என போதைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று மாணவர்களை உறுதிமொழியையும் ஏற்க வைத்துள்ளார்.

Popular

More like this
Related

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...