திருகோணமலை மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட அமைச்சர் சுசில் இணக்கம்!

Date:

கிழக்கு மாகாணம் திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தப்பட்டது தொடர்பிலும், அந்த மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் மன உளைச்சலில் உள்ள விடயத்தையும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்றில் எடுத்துரைத்து அந்த மாணவிகளின் பெறுபேறுகளை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சரை கேட்டுக்கொண்டார்.

நேற்றைய (05) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இந்த விடயத்தில் பேசிக்கொண்டிருந்த போது இதற்கு பதிலளிக்கும் விதமாக  கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்போது  இது சம்பந்தமான விசாரணைகள் எல்லாம் முடிவடைந்து விட்டது. பெறுபேற்றை உடனடியாக வெளியிடுமாறு நான் பரீட்சை திணைக்கள ஆணையாளரிடம் கூறியிருக்கிறேன் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதிலளித்திருந்தார்.

விரைவில் இந்த பெறுபேறுகளை வெளியிடுமாறு அதிகாரிகளை பணித்துள்ளேன். உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இடம் உறுதிபட தெரிவித்தார்.

குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மாணவிகளின் பெறுபேறுகளை இந்த வாரத்தினுள் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பெறுபேற்றை இந்த வாரமே வெளியிட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சுசில் உறுதியளித்துள்ளதுடன் இந்த விடயத்தில் பெரிய தவறு நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வருகிறது.

இது முஸ்லிங்களின் கலாசார பர்தா ஆடை அணிந்து வந்தமையால் ஏற்பட்ட விடயம். இந்த பிரச்சனைக்கு இந்த வாரத்தில் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...