துருக்கியின் தென்மேற்கு மாகாணமான முக்லாவில் உள்ள தேனீ வளர்ப்பவர்கள் தங்கள் சொந்த செலவில் இயற்கையான முறையில் உற்பத்திசெய்த 20,848 தொன் தேனை நேற்றுமுன்தினம் காசா மக்களுக்காக அனுப்பியுள்ளனர்.
முக்லா மாகாண தேனீ வளர்ப்போர் சங்கம் ((MAYBIR) தலைமையிலான ஒரு முன்முயற்சியின் ஒரு பகுதியாக, தேன் பீப்பாக்கள் இஸ்ரேலிய அடக்குமுறையின் கீழ் வாழும் பலஸ்தீனியர்களுக்காக துருக்கி செம்பிறைச்சங்கம் மூலம் மெர்சின் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதன்போது முக்லா மாகாண ஆளுநர் இட்ரிஸ் அக்பியிக் குறிப்பிடுகையில்,
தற்போது நடந்து வரும் இனப்படுகொலையில் முக்லா மாகாணத்தின் தேனீ வளர்ப்பவர்கள் சங்கம் அலட்சியமாக இல்லை, உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக துருக்கி மாறியுள்ளது. மனிதாபிமான துயரங்களுக்கு மத்தியில் காசா போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துருக்கியின் ஆதரவையும் ஆளுநர் உறுதிப்படுத்தினார்.
துருக்கி, துருக்கிய செஞ்சிலுவை, செம்பிறைச்சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து, காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து பல்லாயிரக்கணக்கான மனிதாபிமான உதவி பொருட்களை துருக்கி காசாவுக்கு அனுப்பியுள்ளது.