துல் ஹஜ்ஜின் 10 வது நாளான இன்று சைத்தானுக்குக் கல்லெறியும் கிரியை கடையாக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மினாவிலுள்ள ஜமாரத் பகுதியில் பெருந்திரளான மக்கள் கல் எறியும் காட்சிகளே இவை..
இறைத்தூதர் இப்றாஹிமுடைய (அலை ) மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுவதற்காக சென்ற போது சைத்தான் குறுக்கிட்டதை நினைவுபடுத்துகின்ற ஒரு செயலாக இது அமைகின்றது.

மனம் கனமான அத்தருணத்தின் ரணத்தை அவரைத் தவிர யாரும் உணர முடியாது. ஆனால், எல்லாத் தந்தையைப் போன்றவர் அல்ல இப்ராஹீம். அவர் ஒரு நபி.





