பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 11,100 விகாரைகளின் பாதுகாப்பிற்காக பொலிஸார் உட்பட 50,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி 20,000 பொலிஸ் அதிகாரிகள், 400 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், 700 இராணுவ அதிகாரிகள் மற்றும் 27,000 சமூக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.