ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் (Palitha Range Bandara) மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருவலகஸ்வெவ – மீ ஓயா 07 ஆம் மைலுக்கு அருகிலுள்ள அலிமங்கட பிரதேசத்தில் அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவலகஸ்வெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.