புத்தளம் (வாய்க்கால்) உப்பளத்தின் பூர்வீகம் பாதுகாக்கப்படுவது கட்டாயமாகும்: இன்றைய ஹஜ் பெருநாள் குத்பா உரையில் அஷ்ஷைக்எச்.எம். மின்ஹாஜ்

Date:

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று நாடு முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகின்ற திடல்களிலும் மிகச்சிறப்பாக ஹஜ் பெருநாளை கொண்டாடினர்.

அந்தவகையில் புத்தளம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் கூட்டுத் தொழுகையில் உரை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நகரக்கி ளையின் முன்னாள் தலைவரும் இஸ்லாஹியா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில்,

இப்றாஹிம் அலைஹி ஸ்ஸலாம் அவர்கள் ஓர் “உம்மத்தாக “இருந்தார் என்ற அந்த வசனத்திற்கான பொருளை இன்றைய நடைமுறைக்கேற்ப பல்வேறு உதாரணங்களோடு விளக்கப்படுத்தியதோடு,இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவ்வாறு உம்மத்தாக செயற்பட்டார்களோ அந்த உம்மத்துக்குரிய பண்புகளை நாங்களும் வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டும் என்ற கருத்துக்களை இதன்போது முன்மொழிந்தார்.

இன்று புத்தளம் மண்ணில் ஏற்பட்டிருக்கின்ற சில சவால்களை அடையளப்படுத்திய அஷ்ஷெய்க். மின்ஹாஜ் அவர்கள், குறிப்பாக புத்தளம் உப்பளம் அதனுடைய பூர்வீகத் தன்மையை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அதனை பாதுகாப்பதற்காக உழைப்பதும் பாடுபடுவதும் இப்றாஹிம் அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த போராட்ட வாழ்க்கையின் ஒர் அங்கம் என்பதையும் நினைவுபடுத்தினார்.

இப்றாஹிம் அலை வஸல்லம் அவர்கள் தனிமனிதனாக அன்றி ஓர் சமூகமாக இருந்தார்கள். எப்பொழுதுமே போராடுபவராக இருந்தார்.

அவர்கள் ஒரு முன்மாதிரிமிக்க நபியாக மட்டுமன்றி ஒரு தலைவராகவும் ஒரு தலைமைத்துவத்தை வழங்கிய மாபெரும் தலைவராகவும் இருப்பதையும் குர்ஆன் சுட்டிக்காட்டுவதை அஷ்ஷெய்க் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.

அந்தவகையில் இந்த ஊருக்கும் பலவிதங்களிலும் தலைமைத்துவம் தேவைப்படுகிறது.

எனவே எல்லா விதங்களிலும் தலைமைத்துவம் வழங்குகின்ற புத்திஜீவிகளும் உலமாக்களும் துறைசார்ந்தவர்களும் வியாபாரிகளும் கல்வி நிறுவனங்களும் அதிகமாக உருவாக்கப்படவேண்டும் என்ற தேவையையும் அஷ்ஷெய்க் அவர்கள் தங்களுடைய உரையிலே குறிப்பிட்டார்.

இப்றாஹிம் அலை வஸல்லம் அவர்களுடைய அந்த வாழ்வின் முன்மாதிரிகளை காட்டி விளங்கப்படுத்தி இப்றாஹிம் அலை வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்ற ஒரு பங்கை விளக்க்ப்படுத்தி இன்றைய சமூக முன்னேற்றத்தில் பெண்களுக்கான பங்களிப்பும் இன்றியமையாதது என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

இந்த பெருநாள் தொழுகையில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முஹம்மத் நியாஸ் தற்போதைய புத்தளம் நகர ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...