புனித ஹஜ் காலத்தில் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

Date:

புனித ஹஜ் காலத்தில் சுமார் 44 பாகை செல்சியஸ் வெப்பத்தை எதிர்பார்ப்பதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஹஜ் கடமையின்போது ஆயிரக்கணக்கான வெப்ப பாதிப்பு சம்பவங்கள் பதிவான நிலையில் இந்த ஆண்டிலும் அதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

‘இந்த ஆண்டு ஹஜ் காலத்தில் மக்கா மற்றும் மதீனாவில் சராசரி வெப்பத்தை விட ஒன்றரை மற்றும் இரண்டு பாகை அதிக வெப்பம் எதிர்பார்க்கப்படுகிறது’ என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் ஐமன் குலாதம் செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

வசதி படைத்த முஸ்லிம்கள் வாழ் நாளில் ஒரு தடவையேனும் செய்ய வேண்டிய இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கடந்த ஆண்டு இந்த யாத்திரையில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்கேற்றிருந்ததோடு வெப்பநிலை 48 பாகை செல்சியஸை தொட்ட நிலையில், 2,000க்கும் அதிகமானவர்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக சவூதி நிர்வாகம் குறிப்பிட்டது.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...